ADDED : ஜன 01, 2024 12:21 AM
திருப்பூர்;காங்கயம், காளிவலசை சேர்ந்தவர் சோமசுந்தரம், 80. விவசாயி. கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்ப்பது தொடர்பாக ஈரோடுக்கு கிளம்பி சென்றார். பின், அவர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், உறவினர் ஒருவரை காங்கயம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர்.
இதில் கிடைத்த தகவலை தொடர்ந்து காங்கயம் டி.எஸ்.பி., தலைமையில் போலீஸ் தனிப்படை, தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் அடங்கிய குழுவினர், நொய்யல் ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதியவர் கடத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.