/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுட்டெரிக்கும் வெயில்; தரிசு நிலங்களில் தீ அபாயம்சுட்டெரிக்கும் வெயில்; தரிசு நிலங்களில் தீ அபாயம்
சுட்டெரிக்கும் வெயில்; தரிசு நிலங்களில் தீ அபாயம்
சுட்டெரிக்கும் வெயில்; தரிசு நிலங்களில் தீ அபாயம்
சுட்டெரிக்கும் வெயில்; தரிசு நிலங்களில் தீ அபாயம்
ADDED : பிப் 25, 2024 12:41 AM

திருப்பூர்:கோடை துவங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் துவங்கியுள்ள நிலையில், தீப்பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.கோடை துவங்க, இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், தற்போதே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியிருக்கிறது. பல கிராமப்புறங்களில், சாலையோரம் பல நுாறு ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் புதர்மண்டி கிடக்கின்றன. அவை, நன்கு காய்ந்த நிலையில் இருப்பதால், எளிதில் தீப்பிடிக்கும் நிலையுள்ளது.அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பீடி, சிகரட் பிடித்து, புதருக்குள் வீசியெறிந்து செல்வதன் மூலம், எளிதாக அப்பகுதி முழுக்க தீ பரவும்; சில நேரங்களில், இது விபரீதத்தை ஏற்படுத்தும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள், குப்பைகளை சேகரித்து, ஓரிடத்தில் குவித்து, எரியூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, செய்வதன் வாயிலாகவும், தீப்பரவல் ஏற்படும் வாய்ப்புள்ளது.'பொதுவாக, வனம் நிறைந்த பகுதிகளில், வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் வரைந்து, தீப்பரவல் தடுக்கப்படும்; தவிர்க்கப்படும். திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில், வனத்தீ பரவலுக்கு வித்திடும் வனப்பகுதி இல்லை என்பதால், தீத்தடுப்பு கோடு அமைக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கவனமாக இருக்க வேண்டும்' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
----
வெயிலின் தாக்கத்தில் தரிசு நிலங்களில் எளிதாக தீ பரவும் வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வு அவசியமாகிறது.