ADDED : ஜூன் 12, 2025 11:29 PM

திருப்பூரில் நேற்று, மாற்றுத்திறனாளிகள், 32 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கினர். 31 மாற்றுத்திறனாளிகளுக்கு, 31.55 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு, 1.18 லட்சம் மதிப்பீட்டில், பிரத்யேக ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை பங்க் திறப்பு
திருப்பூர் - காங்கயம் ரோட்டில், வளர்மதி வளாகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்கை, அமைச்சர் கயல்விழி நேற்று திறந்துவைத்தார்.