/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முருகு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சிமுருகு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
முருகு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
முருகு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
முருகு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 24, 2024 01:17 AM

திருப்பூர்:திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர், ஜே.பி., நகர், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் பசுபதி கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் சசிகலா முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி சந்தோஷ் ஒருங்கிணைத்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கைவினைக் கலை உள்ளிட்ட தலைப்புகளில் ஆறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தஞ்சை பெரிய கோவில், பார்லிமென்ட் கட்டம், இந்தியா கேட், சந்திராயன் - 3, காற்றாலை, நீர் மூலம் மின்சாரம் தயாரிப்பது, நிலநடுக்கம், வெள்ள பாதிப்பை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் சென்சார் கருவி என, 500க்கு மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியை பெற்றோர் பலர் பார்வையிட்டனர்.
தங்கள் படைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து மாணவ, மாணவியர் பெற்றோருக்கு விளக்கமளித்தனர்.