Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கல்

சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கல்

சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கல்

சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கல்

ADDED : மே 17, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 38 மாணவர்களுக்கு, மொத்தம் 16 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விழாவில், பள்ளி தாளாளர் சவுந்தரராஜன், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, பாராட்டினார்.

பிளஸ்2 பொதுத்தேர்வில், வருணி மற்றும் அபிநயா, 500 க்கு 487 மதிப்பெண் பெற்று முதலிடம்; மித்ரா, ஹரிஷ்மிதா, 477 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம்; அரிஅந்துவச்சோழன், 472 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில், 491 மதிப்பெண்களுடன் திருமுருகன் முதலிடம்; 489 மதிப்பெண்களுடன் அதன்யா இரண்டாமிடம்; 484 மதிப்பெண்களுடன் நகுலன் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

விழாவில் பள்ளி தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பழனிச்சாமி, துணை தலைவர் கிருஷ்ணன், துணைச் செயலாளர் சாமிநாதன், பள்ளி முதல்வர் ஷீஜா, கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us