/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நெகிழிக்கு 'குட்பை' சொல்லுங்க! கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நெகிழிக்கு 'குட்பை' சொல்லுங்க! கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
நெகிழிக்கு 'குட்பை' சொல்லுங்க! கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
நெகிழிக்கு 'குட்பை' சொல்லுங்க! கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
நெகிழிக்கு 'குட்பை' சொல்லுங்க! கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 04, 2025 12:38 AM

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - - 2 ஆகிய சார்பில், சர்வதேச நெகிழிப்பை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், வித்தியாசமான முறையில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, என்.எஸ்.எஸ்., அலகு -- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாசுக்கட்டுபாடு உதவி பொறியாளர் திப்பு சுல்தான் பேசியதாவது:
அவர் பேசுகையில், 'ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலை நாசமாக்கும் கொடிய அரக்கன். இந்த நெகிழிப் பைகள் மண்ணை மலடாக்கி தாவரங்களின் வளர்ச்சியை கெடுக்கின்றன. மழைநீரை மண்ணுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கிறது. நெகிழிப்பைக்கு மாற்றாக வாழை இலை, துணிப்பை, காகித உறிஞ்சுகுழல்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். நெகிழிப்பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மாசுக்கட்டுபாடு உதவி பொறியாளர் சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார். மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், ரேவதி, திவாகர், லோகேஸ்வரி, பூபதி ஆகாஷ் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் மவுன நாடகம் வாயிலாக பொதுமக்களுக்கு எளிதில் புரியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மஞ்சப்பை வழங்கப்பட்டது.