Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 10ம் வகுப்பு தேர்வெழுதிய சிறப்பு குழந்தைகள்  சாய் கிருபா பள்ளியின் சாதனை

10ம் வகுப்பு தேர்வெழுதிய சிறப்பு குழந்தைகள்  சாய் கிருபா பள்ளியின் சாதனை

10ம் வகுப்பு தேர்வெழுதிய சிறப்பு குழந்தைகள்  சாய் கிருபா பள்ளியின் சாதனை

10ம் வகுப்பு தேர்வெழுதிய சிறப்பு குழந்தைகள்  சாய் கிருபா பள்ளியின் சாதனை

ADDED : மே 26, 2025 11:41 PM


Google News
திருப்பூர், ;'ஆட்டிசம்' பாதித்த சிறப்பு குழந்தைகளையும், இயல்பாக வளரும் குழந்தைகளை போல் அறிவுக்கூர்மையுடன் வளர்த்து, அடிப்படை கல்வி அளித்து வருகிறது, சாய் கிருபா சிறப்பு பள்ளி.

திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகரில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும், வள்ளிபுரம் அருகே பயிற்சி பள்ளியும் இயங்கி வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இப்பள்ளி, மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சியும், வாழ்வியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், 160 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

முதன்முறையாக, என்.ஐ.ஓ.எஸ்., (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓவன் ஸ்கூலிங்) மற்றும் மாநில பாடத்திட்டத்திலும் பயிற்சி அளித்து வருகிறது. சாய் கிருபா பள்ளி மாணவ, மாணவியர், முதன்முதலாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளது, பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இது குறித்து, பள்ளியின் தலைவர் கவின் திருமுருகன் கூறியதாவது:

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, கற்றல் திறன் வளர்க்கப்படுகிறது; அதற்காகவே, பொதுத்தேர்வு எழுதவும் ஊக்குவித்துள்ளோம்; முதன்முதலாக, 10 குழந்தைகள் தேர்வு எழுதியதே எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறோம்.

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற, 10 பேர் தேர்வு எழுதினர்; அவர்களில், ஆறு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஒரே ஒரு மாணவி பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

'ஆட்டிசம்' குழந்தைகளுக்காக, பாடத்திட்டத்தை எளிதாக்கி, பயிற்சி அளித்து வருகிறோம். 'டிப்ளமோ' பயிற்சி அளிப்பதற்கான முயற்சியை துவக்கியுள்ளோம். சான்றிதழ் படிப்புக்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்; ஐந்து பாடங்களுக்கு சான்றிதழ் படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

'கேட்டரிங்' மற்றும் 'ரீடைல்' மேலாண்மை குறித்து 3 ஆண்டு டிப்ளமோ பயிற்சி அளிக்கவும், 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியுடன், கல்வி கற்பிக்கவும் ஏற்பாடுகளை துவக்கியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us