ADDED : ஜூன் 19, 2025 04:55 AM

பெருமாநல்லுார் : பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய அன்னதானக் கூடம் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது.
மேயர் தினேஷ் குமார், அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் சங்கர சுந்தரேசன், திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., பொறுப்பாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் மற்றும் கோவில் முன்னாள் தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னதானக் கூடம் 3, 350 சதுரடியில், ஒரே நேரத்தில் நுாறு பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், நவீன சமையல் கூடம், பொருட்கள் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகிறது.