/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.1.10 கோடி கொள்ளை; தலைமறைவு நபர் கைது ரூ.1.10 கோடி கொள்ளை; தலைமறைவு நபர் கைது
ரூ.1.10 கோடி கொள்ளை; தலைமறைவு நபர் கைது
ரூ.1.10 கோடி கொள்ளை; தலைமறைவு நபர் கைது
ரூ.1.10 கோடி கொள்ளை; தலைமறைவு நபர் கைது
ADDED : மார் 25, 2025 06:37 AM
திருப்பூர்; அவிநாசிபாளையம், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், காரப்பாளையம் பிரிவு அருகே, 1.10 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கில், இதுவரை, எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதில், தலைமறைவாக இருந்த கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த அலாவுதீன், 53 என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1.20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியன கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கில், இதுவரை, 99 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.