Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பையில் ரூ.100 கோடி முறைகேடு

குப்பையில் ரூ.100 கோடி முறைகேடு

குப்பையில் ரூ.100 கோடி முறைகேடு

குப்பையில் ரூ.100 கோடி முறைகேடு

ADDED : செப் 12, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; ''திடக்கழிவு மேலாண்மையில் 100 கோடி ரூபாய் முறைகேடு என்ற குற்றச்சாட்டு எந்த விதமான அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு'' என்று, மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. இதன் மக்கள் தொகை 14 லட்சம். மேலும், தொழில் நிமித்தமாக 2 லட்சம் பேர் தினமும் வந்து செல்கின்றனர்.

இங்கு தினமும் 700 முதல் 800 டன் அளவு குப்பை கழிவு சேகரமாகிறது.

நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை எண் 116/ தேதி 24.8.22ன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஒப்பந்தம் கோரி, கடந்த 2023ல், தினசரி சேகரமாகும் குப்பையின் எடை அளவுக்கேற்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது. அவ்வகையில், டன்னுக்கு, 3859.97 ரூபாய் என்ற அடிப்படையில், சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

தினமும், 573.55 டன் குப்பை அகற்ற வேண்டும். அதற்கான தொகை மட்டுமே அந்நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இருப்பினும் அந்நிறுவனம், 700 டன்னுக்கு மேல் குப்பைகளை அகற்றி வருகிறது. 2,197 துாய்மைப் பணியாளர்கள், 110 மேற்பார்வையாளர்கள், 208 டிரைவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெண்டர்படி 136 வாகனங்கள்; 480 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் கூடுதல் வாகனங்களை நிறுவனம் இயக்கி வருகிறது.

திடக்கழிவு மேலாண்மையில், 200 டன் அளவு ஈரக்கழிவுகளை கொண்டு இயற்கை எரிவாயு தயாரிக்க, 57.84 கோடி ரூபாய் மதிப்பில், எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அரசு அனுமதி கிடைத்துள்ளது. இந்த மையம் செயல்படத்துவங்கும் நிலையில், ஈரக்கழிவுகள் முழுமையாக கையாளப்படும்.

ரூ.1.72 கோடி அபராதம் திருப்பூர் மாநகராட்சியில் துாய்மைப் பணி மேற்கொள்ளும் நிறுவனம் கடந்த, 2023ம் ஆண்டு ஆக., முதல் ஜூலை வரை, 72.26 கோடி ரூபாய்; கடந்த 2024 ஆக., முதல் நடப்பாண்டு ஜூலை மாதம் வரை, 86 கோடி ரூபாய் என இரண்டாண்டுக்கும் சேர்த்து, 158.24 கோடி ரூபாய் தொகை பெற்றுள்ளது.

இது ஒப்பந்த நடை முறையின் படி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் 1.72 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், 100 கோடி ரூபாய் முறைகேடு என்பது உண்மைக்கு மாறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இருப்பினும் அந்நிறுவனம், 700 டன்னுக்கு மேல் குப்பைகளை அகற்றி வருகிறது. 2,197 துாய்மைப் பணியாளர்கள், 110 மேற்பார்வையாளர்கள், 208 டிரைவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us