/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொன்ற கொள்ளையனுக்கு ஆயுள் துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொன்ற கொள்ளையனுக்கு ஆயுள்
துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொன்ற கொள்ளையனுக்கு ஆயுள்
துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொன்ற கொள்ளையனுக்கு ஆயுள்
துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொன்ற கொள்ளையனுக்கு ஆயுள்
ADDED : ஜூன் 05, 2025 02:43 AM

திருப்பூர்:வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது, முதியவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு திருப்பூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூர், மிலிட்டரி காலனியை சேர்ந்தவர் சலீம், 45; இவரது நண்பர்கள், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஸ்வின்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாராயண்தாஸ். மூவரும், ராணுவ வீரர்களாக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள்.
மூவரும் சேர்ந்து, 2007 ஜன., 7ம் தேதி, திருப்பூர், தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தில் உள்ள, கருப்பசாமி, 60 என்பவரது வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கருப்பசாமி சத்தம்போடவே, அவரை சலீம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். கருப்பசாமியின் மனைவி சிவகாமி படுகாயத்துடன் தப்பினார்.
திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து, சலீமை கைது செய்தனர்; மற்ற இருவரும், தலைமறைவாகினர். வழக்கை விசாரித்த, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி பத்மா, சலீமுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.