/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல் சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்
சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்
சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்
சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்

உயர்ந்த தார் சாலைதாழ்ந்த மின் கம்பம்
வார்டின் அதிக மக்கள் தொகை, அதிக வீதிகளை கொண்ட பகுதியாக முருங்கப்பாளையம் உள்ளது. திருப்பூர் - அவிநாசி ரோட்டை ஒட்டிய இப்பகுதியில், சாலை, கால்வாய் வசதிகள் முழுமை பெற்றுள்ளது. மாகாளியம்மன் கோவில் பின்புற சந்து வீதியில் தார்சாலை உயரமானதால், மின்கம்பங்கள் தாழ்வாக மாறியுள்ளன. வாகனங்கள் நிறைய பயணிப்பதால், அடிக்கடி தீப்பொறி பறக்கிறது; மின் கம்பிகளை உயர்த்திக் கட்ட வேண்டும்.
நாய்கள்மயம்மக்கள் அச்சம்
ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி பெயரளவுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. எந்த வீதியில் திரும்பினாலும், ஒன்றிரண்டு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குப்பைகளை நாய்கள் கிளறி, ரோட்டுக்கு எடுத்து வருவதும், வாகனங்களில் செல்வோரை துாரத்தும் செயல்களும் நடக்கிறது. குமார் நகர் தெற்கு வீதியில் தரைப்பாலம் சேதமாகி, சாலை குழியாகியுள்ளது. யாரும் விழுந்து விடும் முன் குழியை மூட வேண்டும்.
மிடுக்கான சாலையா?விபத்து சாலையா?
முருங்கப்பாளையத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சேதமாகியுள்ளது. வார்டில் மெயின் ரோடு குறைவாகவும், சந்து, குறுக்கு வீதிகள், சந்திப்பு, நால்ரோடு, ரவுண்டானா போன்ற அமைப்பு சாலைகள் நிறைய உள்ளது. டூவீலர், பெரிய வாகனங்களில் 'விருட்'டென மக்கள் வந்து செல்கின்றனர். மிடுக்கான சாலைகள் உள்ள இடத்தில் விபத்து அபாயம் உள்ளது; வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
ஆழமற்ற கால்வாய்தேங்கும் கழிவுநீர்
பாரதி வீதி, எம்.என்.எஸ்., நகரில் சாக்கடை கால்வாயை உயர்த்திக் கட்ட வேண்டும். உயரம் குறைவாக உள்ளதால், கழிவுநீர் வழிந்தோட வழியில்லை. மண் குவிந்து, பிளாஸ்டிக் குப்பை நிறைந்திருப்பதால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது.
மாநகராட்சி பள்ளிக்குதடுப்புச்சுவர் அவசியம்
பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடியிருப்புக்கு மத்தியில் உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பள்ளியின் பின்புறம், இடதுபுறம் முட்புதர் வளர்ந்துள்ளது; பள்ளி வளாகத்துக்குள் வர துவங்கியுள்ளது.