/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'திடீர்' முக்கியத்துவம் பெறும் சாலை பாதுகாப்பு கூட்டம் 'திடீர்' முக்கியத்துவம் பெறும் சாலை பாதுகாப்பு கூட்டம்
'திடீர்' முக்கியத்துவம் பெறும் சாலை பாதுகாப்பு கூட்டம்
'திடீர்' முக்கியத்துவம் பெறும் சாலை பாதுகாப்பு கூட்டம்
'திடீர்' முக்கியத்துவம் பெறும் சாலை பாதுகாப்பு கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 10:34 PM
திருப்பூர்; 'மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடத்தப்படும் சாலை பாதுகாப்புக்குழு கூட்டங்களில், அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாவட்ட வாரியாக, அந்தந்த கலெக்டர்கள் முன்னிலையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இதில், மது போதையில், மொபைல் போனில் பேசிய படி வாகனங்களை ஓட்டக்கூடாது என்பன உட்பட பல அறிவுரைகள் வழங்கப்படும். இருப்பினும், சாலை விபத்து என்பது, தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், சாலை பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
'சாலை பாதுகாப்பு கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்; தவறும்பட்சத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
சாலை பாதுகாப்பு குழுவில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களும் கட்டாயம் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.