ADDED : ஜூன் 26, 2025 11:40 PM
பெருமாநல்லுார்; திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, நியூ வள்ளிபுரம் பகுதி பொதுமக்கள் அமைச்சர் சாமிநாதனை சந்தித்து அளித்த மனு:
நியூ வள்ளிபுரம் பகுதியில் நுாறு குடும்பத்தினர் வசிக்கின்றனர். தார்சாலைகள் பழுதாகியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல்லாங்குழி ரோட்டால், வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. இதை தார் சாலையாக சீரமைக்க வேண்டும்.