/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு எம்.பி., யிடம் வேண்டுகோள் மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு எம்.பி., யிடம் வேண்டுகோள்
மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு எம்.பி., யிடம் வேண்டுகோள்
மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு எம்.பி., யிடம் வேண்டுகோள்
மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு எம்.பி., யிடம் வேண்டுகோள்
ADDED : மே 22, 2025 11:52 PM

திருப்பூர் : தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், எம்.பி.,யைச் சந்தித்து, மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்தனர்.
திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள், திருப்பூர் எம்.பி., சுப்பராயனைச் சந்தித்து பேசினர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டியுள்ள தினசரி மார்க்கெட் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் விவரித்தனர். மேலும், மார்க்கெட் வளாகம் ஏலம் விடு வதற்கு முன் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். முன்பகுதியில் உள்ள 17 கடைகளும் உட்பகுதியில் சேர்க்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் தரை தள கடைகள் ஒதுக்க வேண்டும். வளாகத்தின் சுற்றுப்பகுதியில் வேறு தள்ளு வண்டி, பிளாட்பாரக் கடைகள் அமைக்க கூடாது என்பது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். வியாபாரிகள் கோரிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.