/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 21, 2025 10:47 PM
உடுமலை; உடுமலை நகரில் 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கட்டுபாட்டில் உள்ளது.
இருப்பினும், அனைத்து வார்டுகளிலும் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதால், குப்பையிலிருந்து கொசுக்கள் பரவுவதும், கழிவுநீர் ஓடைகளில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலும், கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்கிறது.
நகராட்சி சுகாதாரத்துறையினர் கொசுதொல்லைக்கென நடவடிக்கை எடுப்பதிலும், அலட்சியம் காட்டுகின்றனர். வீதிகள் தோறும் கொசு புகை மருந்து அடிப்பதும் பல மாதங்களாகவே செயல்பாட்டில் இல்லை.
வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் கழிவுநீர் செல்லும் பகுதிகளில் மருந்து தெளித்து விடுவதும், சில பகுதிகளில் மட்டுமே செயல்படுத்துகின்றனர். இதனால் காலையிலும் மக்கள் வீடுகளை திறந்து வைக்க முடியாமலும், ஜன்னல்களையும் அடைத்து, அவதிப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் புகை மருந்து அடிப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.