/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குடியரசு தின விழா: பள்ளிகளில் உற்சாகம்!குடியரசு தின விழா: பள்ளிகளில் உற்சாகம்!
குடியரசு தின விழா: பள்ளிகளில் உற்சாகம்!
குடியரசு தின விழா: பள்ளிகளில் உற்சாகம்!
குடியரசு தின விழா: பள்ளிகளில் உற்சாகம்!
ADDED : ஜன 27, 2024 11:59 PM

திருப்பூர்;திருப்பூரின் பல இடங்களில், நாட்டின், 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
n திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 1997ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் மெர்ச்சன்டைசிங் துறை உதவி பேராசிரியர் சங்கரகார்த்திகேயன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, குடியரசின் பெருமை மற்றும் சிறப்புகள் குறித்து பேசினார்.
n பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குடியரசு தினவிழா நடந்தது; தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி தலைவர் ரேவதி, முன்னாள் மாணவர் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியரின், கலை நிகழ்ச்சி, இலக்கிய போட்டிகளும் நடந்தது. விழாவையொட்டி, விளையாட்டு மற்றும் நுண்கலை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் அறக்கட்டளை பொருளாளர் குப்புசாமி, ஊராட்சி துணை தலைவர் செல்வராஜ், தமிழ் ஆசிரியர் பரந்தாமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
n பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் சிவகுமார், நாகேந்திரன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
n பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் தங்கராஜ் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
n சேமலைக் கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
n பெருந்தொழுவு ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
n கண்டியன்கோவில் ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் கோபால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி செயலாளர் நிரஞ்சனா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
n திருப்பூர் அருகே இடுவாயில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி தாளாளர் முத்துக்குமாரசாமி, தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு; கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் வேல வேந்தன், பள்ளி துணை முதல்வர் அபிநயா உட்பட பலர் பங்கேற்றனர்.