/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுங்க! இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுங்க! இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுங்க! இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுங்க! இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுங்க! இ.கம்யூ., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 24, 2025 06:21 AM
உடுமலை : உடுமலை ராஜேந்திரா ரோட்டில், பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்கா என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும், என இ.கம்யூ., கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இ.கம்யூ., உடுமலை நகரம், 27வது மாநாடு, கட்சி அலுவலகத்தில் நடந்தது. குருசாமி தலைமை வகித்தார்.
மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் எம்.பி., சுப்பராயன், மாவட்ட செயலாளர் இசாக், துணை செயலாளர் ரவி, நிர்வாக குழு உறுப்பினர்கள் சவுந்தர ராஜ், சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், உடுமலை அரசு கல்லுாரியில், முதல் ஷிப்ட் பயிலும் மாணவர்களுக்கு, உரிய பஸ் வசதி இல்லை. எனவே, மதியம், 1:30 மணிக்கு, கல்லுாரியிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு அரசு பஸ் இயக்க வேண்டும்.
ராஜேந்திரா ரோட்டில், பள்ளிகள், பூங்கா, மருத்துவமனைகள் அதிகம் உள்ள பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையால், மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். மதுக்கடையை அகற்ற வேண்டும்.
உடுமலை சந்தை வளாகத்திற்குள் அமைந்துள்ள, குப்பை அரைத்து உரமாக்கும் தொழிற்சாலையால், சுகாதார கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. பொதுமக்கள், அருகிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
புதிதாக அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையில், பாலப்பம்பட்டி பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. ரவுண்டானா அமைக்க வேண்டும்.
உடுமலை நகரில், சிலம்பம், கபடி மற்றும் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தனி மைதானம் அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. செயலாளராக சித்ரா ரணதேவ், துணை செயலாளராக நந்த கோபால், பொருளாளராக சுப்ரமணியம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


