/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல் பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 19, 2025 11:24 PM

உடுமலை; உடுமலை கல்பனா ரோட்டில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பிளக்ஸ் பேனர்களை, அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை கல்பனா ரோட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கும் அந்த ரோடு பிரதானமாக உள்ளது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றன.
விளையாட்டு மைதானத்தின் அருகிலும், எதிர்பகுதியிலும் வரிசையாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பலத்த காற்று வீசுவதால், பேனர்கள் அங்குமிங்குமாய் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அசைகின்றன.
விளையாட்டு மைதானத்துக்கு வருவோர் பலரும், ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும் அருகிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவோரும், வாகனங்களை அப்பகுதிகளில் நிறுத்துகின்றனர்.
அந்த பகுதியில் ஆபத்தான முறையில் இருக்கும், பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.