Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடல் தானத்துக்கு பதிவு; 12ல் மா.கம்யூ., நடத்துகிறது

உடல் தானத்துக்கு பதிவு; 12ல் மா.கம்யூ., நடத்துகிறது

உடல் தானத்துக்கு பதிவு; 12ல் மா.கம்யூ., நடத்துகிறது

உடல் தானத்துக்கு பதிவு; 12ல் மா.கம்யூ., நடத்துகிறது

ADDED : செப் 08, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர், ஓடக்காடு பங்களா வீதியில், புதிதாக கட்டப்பட்ட மா.கம்யூ., கிளை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய அலுவலகத்தை திறந்துவைத்த பின், நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது:

மா.கம்யூ., சீதாராம் யெச்சூரியின் உடல், டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும், அதற்கான புகழஞ்சலி நிகழ்ச்சி, வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக, உடல் தானத்துக்கான படிவத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.

மா.கம்யூ.,வினர் உள்பட விருப்பமுள்ள பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதற்கான படிவத்தில் கையெழுத்திடவேண்டும். இதன்வாயிலாக, தமிழகத்தில் புதிய பண்பாட்டு நிகழ்வு துவங்கப்பட உள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகள், பல்கலை கழகங்கள் ஏராளம் உள்ளன. ஆனால், மருத்துவ மாணவர்களுக்கு, போதிய எண்ணிக்கையில் பரிசோதனை உடல்கள் கிடைப்பதில்லை.

பல்வேறு காரணங்களால், உடல் தானம் செய்வது அரிதானதாக உள்ளது. மா.கம்யூ.,வின் இந்நிகழ்ச்சி வாயிலாக, சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியை, மாற்றத்தை உருவாக்குவோம். மிகப்பெரிய அண்டாவாக இருந்த ஜி.எஸ்.டி.,யை, சிறிய கரண்டி அளவு மட்டும் மத்திய அரசு குறைத்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us