/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு! வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு!
வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு!
வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு!
வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு!
ADDED : ஜன 05, 2024 11:46 PM
திருப்பூர்;இன்று பள்ளி வேலை நாள் என்பதுடன், அடுத்த வாரம் பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், நடப்பு வாரத்துக்கான சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், கடந்த இரு வாரங்களாக, 45 முதல், 65 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
குறிப்பாக, அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர், விடுமுறை முடிந்து மீண்டும் திருப்பூர் திரும்புவோருக்காக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயங்கவுள்ள வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
கோவில்வழி, மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மூன்றுக்கு சேர்த்து, 35 பஸ் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளி திறந்து நான்கு நாட்களாகிறது. இன்று (6ம் தேதி) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ஊருக்கு செல்ல திட்டமிட்டவர்கள், நடப்பு வாரம் பயணிக்க வாய்ப்பில்லை. எனவே, பஸ்களில் எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளது,' என்றனர்.