/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிகழ் நேர கண்காணிப்பு; புதிய மாற்றத்துக்கு தயாராகும் 'டாலர் சிட்டி' நிகழ் நேர கண்காணிப்பு; புதிய மாற்றத்துக்கு தயாராகும் 'டாலர் சிட்டி'
நிகழ் நேர கண்காணிப்பு; புதிய மாற்றத்துக்கு தயாராகும் 'டாலர் சிட்டி'
நிகழ் நேர கண்காணிப்பு; புதிய மாற்றத்துக்கு தயாராகும் 'டாலர் சிட்டி'
நிகழ் நேர கண்காணிப்பு; புதிய மாற்றத்துக்கு தயாராகும் 'டாலர் சிட்டி'
ADDED : ஜூன் 07, 2025 11:23 PM
திருப்பூர்: சர்வதேச சந்தை வாய்ப்புகளுடன் முன்னிலை வகிக்க, தமிழகத்தின் ஆடை தொழில்துறையினர், நிகழ்நேர கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும் என்பதே, காலத்தின் கட்டாயம் என்கின்றனர், நவீன தொழில் உலகின் வழிகாட்டிகள்.
இந்தியாவில் தையல் மற்றும் ஆடைத்தொழில் மிகுந்த வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிக்கு சமமான தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், உலக சந்தையில் நமது போட்டித்திறன் குறையும். அதற்காகவே, புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டியதும் கட்டாயமாகிறது. தையல் பிரிவில், சாதாரண கண்ணோட்டமாக அல்லாமல், நிகழ்கால தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வேலை நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்; அதைத்தான், 'நிஜநேர கண்காணிப்பு' என்கிறோம்.
ஒவ்வொரு தையல் இயந்திரம், தையல் கலைஞரின் செயல்திறன், 'கட்டிங்' துவங்கி 'பேக்கிங்' வரையிலான, துணியின் தன்மை என, அனைத்து நகர்வுகளையும், கம்ப்யூட்டர் மூலமாக கண்காணிக்கப்பட வேண்டும். தையல் மெஷின்களில், 'சென்சார்' கருவி பொருத்தப்படுவதால், நேரமும், அந்நேர உற்பத்தியும் கணக்கிடப்படுகிறது. 'பார்கோர்டு டிராக்கிங்' வசதி இருப்பதால், துணியின் அடையாளத்தை கொண்டு, எந்த பிரிவில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
'டிஜிட்டல் டாஷ்போர்டு' மூலமாக, மேலாளர்கள் உடனடியாக, தையல் நிலவரங்களைப் பார்வையிட முடியும். இத்தகைய நிகழ்நேர கண்காணிப்பு யுத்தியால், 20 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி அதிகரிக்க முடியும் என, முன்னணி நிறுவனங்கள் கூறுகின்றன.
துணியின் தையல் திறன் குறையும் போது, உடனடியாக பழுதான பகுதிகளை கண்டறிந்து, விரைவாக சரிசெய்யவும் வாய்ப்புள்ளது. வேலையாட்கள் பயன்பாடு குறைவதுடன், நேரமும், நிதியும் சேமிக்கப்படும்; செலவு குறையும். திருப்பூர், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில், ஏற்கெனவே பல நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள், சிலவகை 'நிகழ்நேர கண்காணிப்பு' மென்பொருட்களை பயன்படுத்தி வருகின்றன.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் திறன் கண்காணிப்பும் எளிதாகும். மொபைல் வழி கண்காணிப்பு வாயிலாக, தொழிற்சாலைகளை எங்கிருந்தும் பார்வையிடலாம். தொழிலாளர்களின் உழைப்பை நேரடியாக மதிப்பிடலாம்.
மேலாளர்களும், ஒவ்வொரு நொடியிலும், உற்பத்தி தரவுகளை பார்வையிடலாம். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவையை அளிக்கலாம்.
மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்துக்கான வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''நிஜநேர கண்காணிப்பு முறைமை என்பது ஒரு தொழில்நுட்பம் அல்ல; அவசியமான ஒரு மாற்றம். திருப்பூர் மற்றும் தமிழகத்தின் ஆடைத் தொழிலில் இத்தகைய மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களே, சர்வதேச சந்தையில் முன்னிலையில் இருக்கப் போகின்றன,'' என்றார்.