/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.எஸ்.ஓ., கருவி முறையாக இயங்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள் பி.எஸ்.ஓ., கருவி முறையாக இயங்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
பி.எஸ்.ஓ., கருவி முறையாக இயங்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
பி.எஸ்.ஓ., கருவி முறையாக இயங்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
பி.எஸ்.ஓ., கருவி முறையாக இயங்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 08, 2025 06:34 AM
திருப்பூர்; தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் தினேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள், கூட்டுறவு துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் தற்போது பொங்கல் பரிசு பொருள் வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீடுகளில் நேரடியாக சென்று டோக்கன் வழங்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனைத்துப் பொருட்களும் முழுமையாக ஒரே சமயத்தில் நகர்வு செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளுக்கும் பயனாளிகள் எண்ணிக்கைக்கு உரிய வேட்டி சேலை வழங்கப்பட வேண்டும். கடையில் பயன்படுத்தப்படும் பி.எஸ்.ஓ., கருவிகளும், சர்வர் செயல்பாடும் எந்தவிதமான பிரச்னையும் இன்றி முறையாக செயல்படுது உறுதிப்படுத்த வேண்டும்.
இதுபற்றி உரிய நிறுவனத்துக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.இதன் வாயிலாக பொங்கல் பரிசு பொருள் வினியோகம் தடையின்றியும், பிரச்னையும் இன்றியும் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.