/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேளாண் துறைகள் ஒருங்கிணைப்பு கேள்விக்குறி வேளாண் துறைகள் ஒருங்கிணைப்பு கேள்விக்குறி
வேளாண் துறைகள் ஒருங்கிணைப்பு கேள்விக்குறி
வேளாண் துறைகள் ஒருங்கிணைப்பு கேள்விக்குறி
வேளாண் துறைகள் ஒருங்கிணைப்பு கேள்விக்குறி
ADDED : ஜூன் 19, 2025 04:30 AM
திருப்பூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில், வழக்கம் போல், தோட்டக்கலை மேம்பாட்டு முகமைக்கு நடப்பாண்டுக்காக திட்ட நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், துறைகள் ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி, வேளாண் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. வேளாண்மை துறை, 'வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை' என, பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ், 30 ஆயிரம் முதல், 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. ஒதுக்கப்படும் நிதி, தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமைக்கு ஒதுக்கப்படுகிறது. அதன் வாயிலாக தான் வேளாண் துறை உள்ளிட்ட தொடர்புடைய பிற துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கடந்த, 2023 தமிழக பட்ஜெட்டில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உள்ள தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, மண் பரிசோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையிலான திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக நிர்வாகப்பணி எளிமையாவதுடன், துறை ரீதியான திட்டங்கள், விவசாயிகள் எளிமையாக சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில், தொடர்ந்து இழுபறி நீடித்தது.
எழுகிறது சந்தேகம்
பெயர் வெளியிட விரும்பாத வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''துறைகள் ஒருங்கிணைப்பு தொடர்பான அரசின் திட்டம், அரசின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில், இந்தாண்டு, திட்டம் கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு, வேளாண் துறையினர் மற்றும் விவசாயிகள் மத்தியில் இருந்தது. ஆனால், நடப்பாண்டுக்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை வழக்கம் போல், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாகவே வேளாண் துறை சம்பந்தப்பட்ட பிற துறைகளுக்கும் நிதி பகிர்வு அளிக்கப்படும். அந்த வகையில், துறைகள் ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.