/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புக்குளிபாளையம் சாலை உருக்குலைந்தது நிலை புக்குளிபாளையம் சாலை உருக்குலைந்தது நிலை
புக்குளிபாளையம் சாலை உருக்குலைந்தது நிலை
புக்குளிபாளையம் சாலை உருக்குலைந்தது நிலை
புக்குளிபாளையம் சாலை உருக்குலைந்தது நிலை
ADDED : ஜூன் 15, 2025 11:12 PM

திருப்பூர்; திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது புக்குளிபாளையம். மங்கலம் அடுத்துள்ள அப்பகுதிக்கு, சோமனுார் ரோடு பகுதியில் இருந்தும், பல்லடம் ரோட்டில் இருந்தும் இணைப்பு ரோடு உள்ளது.
பல்லடம் ரோட்டில் இருந்து பிரியும் இணைப்பு ரோடு, புக்குளிபாளையம், வேட்டுவபாளையம் வரை செல்கிறது. தார்ரோடு பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது; பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த ரோடு மோசமாக சேதமடைந்துள்ளது.
சில இடங்களில் தார்ரோடு இருந்ததற்கான அடையாளமே இல்லை. சிறிய மழை பெய்தாலும், மழைநீர் குளம் போல் தேங்கி, மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மங்கலம் ரோட்டுடன் இணையும் பகுதியில், மின்கம்பங்கள் இருப்பதால், கனரக வாகனங்கள் செல்வதிலும் இடையூறு ஏற்படுகிறது.
மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர் ஒன்றிய நிர்வாகம், புக்குளிபாளையம் பகுதி மக்களின் அவலநிலையை உணர்ந்து, உடனடியாக, ரோட்டை சீரமைக்க முன்வர வேண்டும்.