/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆலமரம் போல் வளர்ந்துள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அமைச்சர் சாமிநாதன் பாராட்டுஆலமரம் போல் வளர்ந்துள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அமைச்சர் சாமிநாதன் பாராட்டு
ஆலமரம் போல் வளர்ந்துள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அமைச்சர் சாமிநாதன் பாராட்டு
ஆலமரம் போல் வளர்ந்துள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அமைச்சர் சாமிநாதன் பாராட்டு
ஆலமரம் போல் வளர்ந்துள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அமைச்சர் சாமிநாதன் பாராட்டு
ADDED : ஜூலை 26, 2024 11:52 PM

திருப்பூர்;பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின், 'கிளயோஸ் பெஸ்டா 2024' என்ற பெயரில், 16வது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் சண்முகம், முன்னிலை வகித்தார்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை விருந்தினராக பங்கேற்று, விழாவை துவக்கி வைத்து பேசுகையில், 'கடந்த, 2008ல், வெறும், 36 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளி, ஆலமரம் போல் வளர்ந்து, தற்போது, 2,000 மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருவது, பெருமையளிக்கிறது,'' என்றார்.
நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசுகையில், ''பள்ளி ஆண்டு விழா போல் இல்லாமல், பல்கலை ஆண்டு விழா போல் உள்ளது. எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வகையில் இப்பள்ளி செயல்படுகிறது,'' என்றார்.
கடந்த கல்வியண்டில், 10 மற்றும், 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, பள்ளி முதல்வர் சீனிவாசன், அறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியர் ஆண்டறிக்கை சமர்பித்தனர். முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
விழாவில், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, ராமநாதன், அந்தோணிசாமி, அஷ்வின் சந்திரகுமார் மற்றும் பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.
---
பெருமாநல்லுார் கே.எம்.சி., பள்ளி, 16வது ஆண்டு விழாவில், பங்கேற்ற அமைச்சர் சாமிநாதனுடன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்.