/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சொத்து, குப்பை வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமை' 'சொத்து, குப்பை வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமை'
'சொத்து, குப்பை வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமை'
'சொத்து, குப்பை வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமை'
'சொத்து, குப்பை வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமை'
ADDED : ஜூன் 15, 2025 11:31 PM

திருப்பூர்; இந்திய கம்யூ., கட்சி திருப்பூர் மாநகர 2வது மண்டல குழுவின்,5வது மாநாடு புது பஸ் ஸ்டாண்ட் அருகேஉள்ள மண்டல குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
எம்.பி., சுப்பராயன், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
இரண்டாம் மண்டல குழு செயலாளராக சசிக்குமார், துணை செயலாளர்களாக விஜய், முத்துப்பாண்டி, பொருளாளராக ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், விபத்துக்களை தடுக்கவும், புஷ்பா ரவுண்டானா பகுதியிலிருந்து, பெருமாநல்லுார் வரை பறக்கும்பாலம் அமைக்கவேண்டும். மாநகராட்சியின் சொத்து வரி, குப்பை வரி உயர்வு, பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.