Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயறு உற்பத்திக்கு ஊக்குவிப்பு; ரூ. 7 லட்சம் மானியம் தயார்!

பயறு உற்பத்திக்கு ஊக்குவிப்பு; ரூ. 7 லட்சம் மானியம் தயார்!

பயறு உற்பத்திக்கு ஊக்குவிப்பு; ரூ. 7 லட்சம் மானியம் தயார்!

பயறு உற்பத்திக்கு ஊக்குவிப்பு; ரூ. 7 லட்சம் மானியம் தயார்!

ADDED : மே 31, 2025 05:24 AM


Google News
அவிநாசி; மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பயறு வகை உற்பத்திக்காக, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

மாவட்டந்தோறும், ஒவ்வொரு வட்ட அளவிலும், இத்திட்டத்தின் கீழ், பயறு வகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரத்தில், பயறு வகை பயிர் சாகுபடியை அதிகரிக்க செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

அவிநாசி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சத்யா பேசியதாவது; உடல் ஆரோக்கியத்துக்கு புரோட்டின் சத்து அவசியம்; தினமும் பயறு வகை உணவு உட்கொள்வதன் வாயிலாக இச்சத்தை பெற முடியும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு, புரோட்டின் சத்து மிக அவசியம்.

இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றில் இச்சத்து இருப்பினும், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை, துவரை, கொள்ளு உள்ளிட்டவற்றிலும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. எனவே, பயறு வகை உற்பத்தியை பெருக்க வேளாண் துறை முனைப்புடன் செயல் படுகிறது.

அவிநாசி வட்டாரத்தில் பயறு வகை உற்பத்தியை மேற்கொள்ள, 7 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், பயறு வகை விதைகளுக்கு, உற்பத்தி மற்றும் வினியோக மானியம், நுண்ணுாட்டச்சத்து உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், உயிரியல் பூச்சி மருந்து போன்ற பல்வேறு இனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண் அலுவலர் சுஜி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us