/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீசியெறியப்படும் பாலிதீன் பொருள் சேகரித்து வந்த மாணவர்களுக்கு பரிசு வீசியெறியப்படும் பாலிதீன் பொருள் சேகரித்து வந்த மாணவர்களுக்கு பரிசு
வீசியெறியப்படும் பாலிதீன் பொருள் சேகரித்து வந்த மாணவர்களுக்கு பரிசு
வீசியெறியப்படும் பாலிதீன் பொருள் சேகரித்து வந்த மாணவர்களுக்கு பரிசு
வீசியெறியப்படும் பாலிதீன் பொருள் சேகரித்து வந்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 14, 2025 02:05 AM

அவிநாசி;அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் மற்றும் துப்புரவாளன் அறக்கட்டளையினர் சார்பில், 'குப்பை மறுசுழற்சி' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். பள்ளி இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் லலிதா வரவேற்றார். திருமுருகன்பூ ண்டி ரோட்டரி சங்க இன்ட்ராக்ட் சேர்மன் சக்கரபாணி, முன்னிலை வகித்தார்.
துப்புரவாளன் அறக்கட்டளையின் கோகுலகிருஷ்ணன், பேசுகையில் ''பாலிதீன் கேரி பை உள்ளிட்ட பொருட்களால் மண்ணுக்கு ஏற்படும் கேடு குறித்து, மாணவர்கள் உணர வேண்டும். அவற்றை மறுசுழற்சி செய்வதன் வாயிலாக கிடைக்கும் பாலிதீன் புழக்கம் தவிர்க்கப்படுவதுடன், அவை மாற்றுத் திட்டத்துக்கும் பலன் தருகிறது. பாலிதீன் இல் லா பள்ளி வளாகம் என்ற நிலையை அடைய, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் இருந்து சேகரித்து வைத்து எடுத்து வந்த, 903 கிலோ எடை கொண்ட தினசரி, வார பத்திரிக்கைகள், காகிதம், புத்தகம், அட்டைப்பெட்டி, மின்னணு கழிவுகள், பாலிதீன் பொருட்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. இதில், மறுசுழற்சிக்கு உதவும் பாலிதீன் பொருட்களை அதிகபட்சம், 28 கிலோ சேக ரித்து வந்த, 8ம் வகுப்பு மாணவி பஹீமா பர்வீன், 22 கிலோ சேகரித்து வந்த, 8 ம் வகுப்பு மாணவி பியூட்டி குமாரி, 16 கிலோ சேகரித்து வந்த 5ம் வகுப்பு மாணவன் செந்தில்நாதன் ஆகியோருக்கு சிறப்பு பரிசாக பதக்கம் அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
பின், மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை அனைத்து மாணவ, மாணவியரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் எடைக்கேற்றாற் போல் பேனா, பென்சில், நோட்டு, ரப்பர், கலர் பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.