/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருட்டு ஆசாமிக்கு சிறை தண்டனை; கோர்ட் உறுதி திருட்டு ஆசாமிக்கு சிறை தண்டனை; கோர்ட் உறுதி
திருட்டு ஆசாமிக்கு சிறை தண்டனை; கோர்ட் உறுதி
திருட்டு ஆசாமிக்கு சிறை தண்டனை; கோர்ட் உறுதி
திருட்டு ஆசாமிக்கு சிறை தண்டனை; கோர்ட் உறுதி
ADDED : மே 20, 2025 12:50 AM
திருப்பூர்; ஊத்துக்குளியில் கடையில் திருடிய நபருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உறுதி செய்து, அப்பீல் மனுவை திருப்பூர் கோர்ட் தள்ளபடி செய்தது.
திருப்பூர் --- ராக்கியாபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா அலி, 26. கடந்தாண்டு, பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்செல்வி என்பவரின் வெள்ளி நகை விற்பனை கடையில், மோதிரம் வாங்குவது போல் நடித்து, வெள்ளிப் பொருட்களைத் திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.
அக்கம்பக்த்தினர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்த வழக்கில் முஸ்தபா அலிக்கு ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட்டில் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்து அவர் திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு, நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஊத்துக்குளி கோர்ட் பிறப்பித்த தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.