/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிரதமர் மோடி பல்லடம் வருகை; அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்பிரதமர் மோடி பல்லடம் வருகை; அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி பல்லடம் வருகை; அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி பல்லடம் வருகை; அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி பல்லடம் வருகை; அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 24, 2024 10:51 PM
பல்லடம்:பிரதமர் வருகையை முன்னிட்டு, பல்லடத்தில், கலெக்டர் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
வரும், 27ம் தேதி பல்லடத்தில் நடக்கவுள்ள பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏறத்தாழ, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமர் வருகை குறித்த சிறப்பு ஆய்வு கூட்டம், தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உட்பட, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் முன்னிலை வகித்தனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. போலீசார், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.