/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : பிப் 25, 2024 01:42 AM

பல்லடம்:பல்லடத்தில், பிரதமர்பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்துக்கானஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில், பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியன, வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதற்காக, 1,400 ஏக்கர் பரப்பளவிலான நிலம் தயார்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம், அண்ணாமலை, மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தொண்டர்கள் அமர்ந்துபார்ப்பதற்காக இருக்கை வசதி, குடிநீர், உணவு, வாகன பார்க்கிங், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்ட மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், 'ஹெலிபேடு' மற்றும் பிரதமரை அழைத்து வருவதற்கான பிரத்யேக பாதை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிக்காக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
பொதுக்கூட்ட வளாகம் முழுவதுமாக மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளதால், பொதுக்கூட்ட மைதானம் தீவிர கண்காணிப்பில் உள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.