ADDED : அக் 16, 2025 06:04 AM

பல்லடம்: பல்லடம் வனம் அமைப்பின், வனாலயம் வளாகத்தில் மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம் மற்றும் திருப்பூரில் புதிதாகப் பொறுப்பேற்ற 'சைமா' நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
'வனம்' அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
'சைமா' தலைவர் சண்முகசுந்தரம் பேசினார்.
மலைவேம்பு மற்றும் வல்லாரை மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன. 'சைமா' துணைத்தலைவர் பாலசந்தர், செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனம் அமைப்பின் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.


