/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மகளிர் பள்ளி சாதனை பாராட்டு விழாவில் புகழாரம் அரசு மகளிர் பள்ளி சாதனை பாராட்டு விழாவில் புகழாரம்
அரசு மகளிர் பள்ளி சாதனை பாராட்டு விழாவில் புகழாரம்
அரசு மகளிர் பள்ளி சாதனை பாராட்டு விழாவில் புகழாரம்
அரசு மகளிர் பள்ளி சாதனை பாராட்டு விழாவில் புகழாரம்
ADDED : ஜூன் 04, 2025 01:53 AM

அவிநாசி,; அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனையொட்டி, பாராட்டு விழா நேற்று நடந்தது.
பள்ளிக்கு சாதனை விருது, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அறிவுச்சுடர் அறக்கட்டளை சார்பில் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பூர் மேயர் தினேஷ்குமார் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழும், ஊக்கப் பரிசுகளும் வழங்கினார். மாணவியர்களுக்கு திறம்பட கற்பித்தல் செய்த ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், நகராட்சி தலைவர் தனலட்சுமி, நகர செயலாளர் வசந்தகுமார், அவைத்தலைவர் ராயப்பன், கவுன்சிலர்கள் பரக்கத்துல்லா, கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை புனிதவதி நன்றி கூறினார்.