/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'துணிப்பை விற்பனை அதிகரித்தால் விசைத்தறிகள் மேம்படும்''துணிப்பை விற்பனை அதிகரித்தால் விசைத்தறிகள் மேம்படும்'
'துணிப்பை விற்பனை அதிகரித்தால் விசைத்தறிகள் மேம்படும்'
'துணிப்பை விற்பனை அதிகரித்தால் விசைத்தறிகள் மேம்படும்'
'துணிப்பை விற்பனை அதிகரித்தால் விசைத்தறிகள் மேம்படும்'
ADDED : ஜன 01, 2024 12:17 AM

பல்லடம்;''துணிப்பை திட்டத்தால், ஜவுளி தொழில் மேம்படும்'' என, விசைத்தறி உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் இத்தொழில், கடந்த, 2024ல் வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை விசைத்தறியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
கடந்த, 2023ம் ஆண்டு துவக்கத்தில் மின் கட்டண உயர்வு பிரச்னை துவங்கியது. இது, விசைத்தறி உட்பட, பஞ்சு நுால் மில்கள், சைசிங் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்கள் அனைத்தையும் பாதித்தது.
துணி உற்பத்தியும் இதனால் பாதிக்கப்பட்டு, எதிர்பார்த்த கூலியும் விசைத்தறி தொழிலுக்கு கிடைக்கவில்லை. பஞ்சு நுால் விலை ஏற்ற இறக்கங்களும், ஜவுளி உற்பத்தி தொழிலை பெரிதும் பாதித்தன.
டிச., 2023ல், இந்தியாவுடனான வங்கதேச ஒப்பந்தம் முடிவடைகிறது. ஜன., 2024ல், புதிய ஒப்பந்தம் போடப்படுமானால், இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும். இதனால், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மேம்படும்.
ஏனெனில், பீஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களில், விசைத்தறி தொழிலுக்கு, 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில், ஜவுளி தொழிலுக்கு எந்த சலுகைகளும் இல்லை.
அரசு பள்ளி மாணவ மாணவியர், போக்குவரத்து கழகம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கான சீருடைகளின் ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்க வேண்டும். 2019ல், துணிப்பை விற்பனை கணிசமாக உயர்ந்தது. இதன் பிறகு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, துணிப்பை விற்பனை மீண்டும் சரிந்தது.
நெகிழிப்பைகளை முற்றிலுமாக ஒழித்தால் மட்டுமே, துணிப்பை விற்பனை அதிகரிக்கும். இதனால், விசைத்தறி ஜவுளி தொழில் மேம்படும். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி கொடுத்தால், 2024ல் விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.