Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் கூலி பிரச்னை; விசைத்தறியாளர் வேதனை

மீண்டும் கூலி பிரச்னை; விசைத்தறியாளர் வேதனை

மீண்டும் கூலி பிரச்னை; விசைத்தறியாளர் வேதனை

மீண்டும் கூலி பிரச்னை; விசைத்தறியாளர் வேதனை

ADDED : மே 22, 2025 03:39 AM


Google News
பல்லடம்; கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கேட்டு பல்வேறு கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த ஏப்., மாதம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் கூலி பிரச்னை தலைதுாக்கி உள்ளது.

இது குறித்த, சங்க தலைவர் பூபதி கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜன., மாதம் முதல் புதிய கூலி உயர்வு கேட்டு போராட்டத்தை துவக்கினோம். தமிழக முதல்வர், அமைச்சர்கள், 2 மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்க மறுத்தால், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சோமனுாரில், காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை எம்.பி., ராஜ்குமார், மேயர் தினேஷ்குமார் மற்றும் கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.

அதில், சோமனுார் பகுதி ரகங்களுக்கு, 15 சதவீதம் மற்றும் இதர ரகங்களுக்கு, 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

ஏப்., 21 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சோமனுார் பகுதியில் புதிய கூலி உயர்வு அமலுக்கு வந்த போதும், அவிநாசி, தெக்கலுார், பல்லடம், திருப்பூர் பகுதிகளில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

எண்ணற்ற விசைத்தறியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கும் சூழலுக்கு விசைத்தறியாளர்களை தள்ளிவிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us