/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்புஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு
ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு
ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு
ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு
ADDED : பிப் 24, 2024 01:26 AM

பல்லடம்;பல்லடத்தில், ஆட்டோ டிரைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், அடுத்த மாதம், 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில், 45 ஆட்டோக்கள் உள்ளன. ஆட்டோ டிரைவர்கள் மத்தியில், ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் தொடர்பாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, ஆட்டோ டிரைவர்களுக்கு, பல்லடம் தாசில்தார் அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்று தாசில்தார் ஜீவா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு, ஆட்டோ டிரைவர்கள் ஆஜராயினர். அதில், ஆட்களை நியமித்து 24 மணி நேரமும் ஆட்டோக்களை இயக்குவதால் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக, சிலர் குற்றம்சாட்டினர். சூழ்நிலை காரணமாக ஆட்களை வைத்து ஆட்டோ ஓட்டி வருவதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.
சிலர் தங்களுக்கும் ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு, மூன்று தரப்பாக மனுக்கள் வழங்கப்பட்டதால், முடிவு எட்டப்படாமல், வரும், மார்ச் 5ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக, தாசில்தார் அறிவித்தார்.