/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
ADDED : ஜன 11, 2024 07:07 AM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்தில் முதல்நாளான நேற்று, 2 லட்சத்து 39 ஆயிரத்து 514 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,135 கடைகள் மூலம், 7 லட்சத்து 97 ஆயிரத்து 852 அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. வழக்கமான குடிமைப்பொருள் வழங்கல் பணிகள் நிறுத்தப்பட்டு, நேற்று காலை முதல் அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளுக்குவந்து, வரிசையில் காத்திருந்து கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெற்றுச்செல்கின்றனர். கைரேகை பதிவு செய்யப்பட்டும், கைரேகை பதிவு செய்ய முடியாதோரிடம் கையெழுத்து பெற்றும், பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.
முதல்நாளான நேற்று, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 514 கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்நாளிலேயே, மொத்த கார்டுதாரர்களில் 30 சதவீதம் பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.