/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வள்ளி கும்மியாட்டத்துடன் பொங்கல் விழாவள்ளி கும்மியாட்டத்துடன் பொங்கல் விழா
வள்ளி கும்மியாட்டத்துடன் பொங்கல் விழா
வள்ளி கும்மியாட்டத்துடன் பொங்கல் விழா
வள்ளி கும்மியாட்டத்துடன் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 01:50 AM

திருப்பூர்;திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா, இளைஞர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. வள்ளி கும்மியாட்டத்துடன் ஆரவாரமாக நிகழ்ச்சி நடந்தது.
விவேகானந்தர் பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் தின விழா, பொங்கல் விழா ஆகியவற்றுக்கு தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் பாண்டிச்சாமி 'விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு' எனும் தலைப்பில் பேசினார்.
மாணவர்கள், இளைஞர்களின் விடிவெள்ளி விவேகானந்தர் எனும் தலைப்பில் தொகுப்பு, தகவல்களை வாசித்தனர். விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பொங்கல் விழா பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொங்கல் வைத்தனர். வழிபாடு நடத்தப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்வுகளை தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் ஒருங்கிணைத்தார்.
பெற்றோர், மேலாண்மை குழு உறுப்பினர்கள் 50 பேர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடந்தது. பங்கேற்றவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கினர்.
மாணவர்கள் கைதட்டி ஆரவாரமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.