/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய வேலை உறுதி திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரம் தேசிய வேலை உறுதி திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரம்
தேசிய வேலை உறுதி திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரம்
தேசிய வேலை உறுதி திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரம்
தேசிய வேலை உறுதி திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 09, 2025 09:37 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளங்கள் துார்வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை துார்வாரப்படாமல் இருப்பதால், ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதும், சமநிலையாக மாறியும் விட்டது.
மேலும், பல கிராமங்களில் நீர்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் முழுவதும் படர்ந்து நீராதாரத்தை சீர்குலைத்து வருகிறது.
சுழற்சி முறையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளங்களை துார்வாருதல் பணிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டில், வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பதால், பணிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குளம் துார்வாருதல் பணிகள் முதன்மையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் கிராம ஊராட்சிகளில் உள்ள குளங்களில், துார்வாருதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்தாண்டில் விடுபட்ட மீதமுள்ள குளம் துார்வாருதல் பணிகள் நடப்பாண்டில் முடிப்பதற்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பின், புதிய பணிகள் துவக்கப்படும்' என்றனர்.