/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அ.தி.மு.க.,வில் சிறப்பான வளர்ச்சி; பொள்ளாச்சி ஜெயராமன் மகிழ்ச்சிஅ.தி.மு.க.,வில் சிறப்பான வளர்ச்சி; பொள்ளாச்சி ஜெயராமன் மகிழ்ச்சி
அ.தி.மு.க.,வில் சிறப்பான வளர்ச்சி; பொள்ளாச்சி ஜெயராமன் மகிழ்ச்சி
அ.தி.மு.க.,வில் சிறப்பான வளர்ச்சி; பொள்ளாச்சி ஜெயராமன் மகிழ்ச்சி
அ.தி.மு.க.,வில் சிறப்பான வளர்ச்சி; பொள்ளாச்சி ஜெயராமன் மகிழ்ச்சி
ADDED : பிப் 25, 2024 12:36 AM

திருப்பூர்:''பொதுசெயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெ.,வின், 76வது பிறந்த நாள் விழா நேற்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட ஜெ., படத்துக்கு, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்எல்.ஏ.,கள் குணசேகரன், பழனிசாமி, நடராஜன், சீனியம்மாள் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செய்தனர். கட்சியினருக்கு, இனிப்பு வழங்கப்பட்டது.
மாநகராட்சி எதிக்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, 'கொறடா' கண்ணப்பன், பகுதி செயலாளர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''முடங்கியிருந்த சாயம் மற்றும் பனியன் தொழில் உயிர்பெற, 2011ல் அ.தி.மு.க. வட்டியில்லா கடன் வழங்கி உதவியது. திருப்பூரில் தொழிலும், மக்களும் தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
திருப்பூர் தொகுதியில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும். பொதுசெயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது,'' என்றார்.
பெருமாநல்லுார்
திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஜெ., பிறந்த நாள் விழா பெருமாநல்லுார் நால் ரோட்டில் நடைபெற்றது. ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், கட்சியின் ஒன்றிய பொருளாளர் சிவசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் பொன்னுலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகன்யா, சுலோசனா, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.