லாரி டிரைவர் பலி
சங்ககிரியில் இருந்து, சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு, இரண்டு லாரிகள் நேற்று முன்தினம் இரவு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லுார் அடுத்த ஈட்டி வீரம் பாளையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது. படுகாயம் அடைந்த பின்னால் சென்று மோதிய லாரி டிரைவர் கூடலுார், வேடன்வயல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29, அதே இடத்தில் இறந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுரேஷ், 36. மது பழக்கம் உள்ளது. கடந்த, 3ம் தேதி மது அருந்தி விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். வீட்டில் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்த போது அவர் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் பலி
தாராபுரம், வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீ வர்ஷா, 21. தனியார் கல்லுாரியில் படித்து வந்தவர், இரண்டாம் ஆண்டோடு, படிக்க விருப்பம் இல்லாத காரணமாக, இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். தலைவலிக்கு மருந்து மாத்திரை எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், துாக்குமாட்டி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.