/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம் பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம்
ADDED : மே 31, 2025 05:15 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத, 518 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மே, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது; 97.53 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர், மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்தது. தேர்வெழுதிய, 25 ஆயிரத்து, 597 மாணவ, மாணவியரில், 385 மாணவர், 248 மாணவிகள் என, 603 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன், 25 முதல் துணைத் தேர்வு நடத்தப்படுமென தேர்வுத்துறை அறிவித்தது. இத்தேர்வுக்கு மே, 14 முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது; மே 29 ம் தேதி வரை மாவட்டத்தில், 518 பேர் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று (மே 31 ம் தேதி) தட்கல் திட்டத்தின் கீழ், கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. துணைத் தேர்வுகள் குறித்த விரிவான கால அட்டவணை மற்றும் கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.