/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு
அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு
அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு
அரசு மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிப்பு
ADDED : மார் 22, 2025 06:50 AM
திருப்பூர்: நோயாளிகள், மருந்து, மாத்திரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருந்தகம் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மருந்தகம் காலை 7:00 முதல் மதியம், 1:00 மணி வரை செயல்பட்டு வந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்க நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் மதியம், 2:00 மணி ஆகிறது. இதனால், மருந்தகம் செயல்படும் நேரம் மாலை, 4:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அலுவலர்கள் கூறுகையில், 'சுழற்சி முறையில் காலை, 7:00 முதல், 11:00 மணி வரையும், 11:00 முதல் மாலை 4:00 மணி வரையும் மருந்தாளுனர்கள் பணியில் இருப்பர். மருந்து, மாத்திரை சரிபார்த்து, ஒவ்வொருவருக்கும் விளக்கம் தர நேரம் பிடிக்கிறது. நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, மருந்தகம் மாலை 4:00 மணி வரை செயல்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. மருந்தகம், செயல்பாடு குறித்து ஏதேனம் சந்தேகம் இருந்தால், 73581 34807 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,' என்றார்.