Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாசுபட்ட நொய்யலை மீட்டெடுக்க மனு

மாசுபட்ட நொய்யலை மீட்டெடுக்க மனு

மாசுபட்ட நொய்யலை மீட்டெடுக்க மனு

மாசுபட்ட நொய்யலை மீட்டெடுக்க மனு

ADDED : ஜூன் 06, 2025 06:19 AM


Google News
திருப்பூர்; உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'மாசுபட்டுள்ள நொய்யல் நதியை மீட்டெடுக்க வேண்டும்' என, தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய, வடக்கு மாவட்ட பொறியாளரிடம் வழங்கிய மனு:

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பாயும் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை, மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுகள், உள்ளாட்சி அமைப்பின் கழிவுநீரால், ஆற்றங்கரையை ஒட்டியுள்ள விவசாய பூமி கெட்டுள்ளது.

நீராதாரம் மாசடைந்து, விவசாயிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுகின்றன.கோவை மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் படுகையில் இருகூர், ராசிபாளையம், கரவழிமாதப்பூர் ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி பகுதி முழுவதும், மங்கலம், ஆண்டிபாளையம் என, பல்வேறு நொய்யல் வழித்தடத்தில் விவசாயிகள், வாழ்வாதாரம், கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, மாசுபட்ட நீரை, நொய்யல் ஆற்றில் விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்; கழிவுநீரை சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆற்றில் விட வேண்டும். நொய்யல் படுகையில் அதிகம் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு, வருவாய்த்துறை வாயிலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாயப்பட்டறைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us