/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொது இடங்களில் முகக்கவசம் அணியும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியும் மக்கள்
பொது இடங்களில் முகக்கவசம் அணியும் மக்கள்
பொது இடங்களில் முகக்கவசம் அணியும் மக்கள்
பொது இடங்களில் முகக்கவசம் அணியும் மக்கள்
ADDED : மே 26, 2025 06:17 AM

திருப்பூர்: மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால், திருப்பூரில், பொது இடங்களுக்கு வருவோர், மீண்டும் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.
நம் நாட்டில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் துவங்கியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று வரும் போது, மக்கள் முககவசம் அணிய துவங்கிவிட்டனர்.
திருப்பூர் நகரப்பகுதியில் பொதுமக்கள் பலர் முக கவசம் அணிந்து வருவதைக் காண முடிகிறது. விடுமுறை நாளான நேற்று மத்திய பஸ்ஸ்டாண்ட், கடை வீதிகள், வணிக வளாகங்களுக்கு வந்தவர்கள், பெரும்பாலும் நேற்று முககவசம் அணிந்திருந்தனர். முகக்கவசங்களின் விற்பனையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
சுகாதாரத்துறை டாக்டர்கள் கூறுகையில், 'தமிழக அளவில் கொரோனா தொற்று குறித்து அச்சம் தேவையில்லை; கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கவலை வேண்டாம். பொது இடங்களுக்கு சென்று வரும் போது முககவசம் அணிவது பாதுகாப்பானதுதான். வெளியே சென்று வந்தால், சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவலாம்,' என்றனர்.