Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொது இடங்களில் முக கவசம் அணியும் மக்கள்

பொது இடங்களில் முக கவசம் அணியும் மக்கள்

பொது இடங்களில் முக கவசம் அணியும் மக்கள்

பொது இடங்களில் முக கவசம் அணியும் மக்கள்

ADDED : மே 26, 2025 03:56 AM


Google News
திருப்பூர்: மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால், திருப்பூரில், பொது இடங்களுக்கு வருவோர், மீண்டும் முககவசம் அணிய துவங்கி-யுள்ளனர்.

நம் நாட்டில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் துவங்கியிருக்-கிறது. பல்வேறு மாநிலங்களில், தொற்று பாதிப்பு கண்டறியப்-பட்டு வருகிறது.இதை தொடர்ந்து பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று வரும் போது, மக்கள் முககவசம் அணிய துவங்கிவிட்டனர். திருப்பூர் நகரப்பகுதியில் பொதுமக்-கள் பலர் முக கவசம் அணிந்து வருவதைக் காண முடிகிறது. விடுமுறை நாளான நேற்று மத்திய பஸ் டாண்ட், கடை வீதிகள், வணிக வளாகங்களுக்கு வந்தவர்கள், பெரும்பாலும் நேற்று முகக-வசம் அணிந்திருந்தனர். முக கவசங்களின் விற்பனையும் அதிக-ரிக்கத் துவங்கியுள்ளது.

சுகாதாரத்துறை டாக்டர்கள் கூறுகையில், 'தமிழக அளவில் கொரோனா தொற்று குறித்து அச்சம் தேவையில்லை; கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கவலை வேண்டாம். பொது இடங்களில் சென்றுவரும் போது முககவசம் அணிவது பாதுகாப்-பானதுதான். வெளியே சென்று வந்தால், சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவலாம்,'

என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us