/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆபத்தான நிலையில் பிளக்ஸ்; அகற்ற மக்கள் வலியுறுத்தல் ஆபத்தான நிலையில் பிளக்ஸ்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ஆபத்தான நிலையில் பிளக்ஸ்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ஆபத்தான நிலையில் பிளக்ஸ்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ஆபத்தான நிலையில் பிளக்ஸ்; அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 10:46 PM

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆபத்தான நிலையில் இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள பிரதான ரோடுகளில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களை தவிர, அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நகரில் ஆபத்தான நிலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பருவமழை காலமாக உள்ளதுடன், காற்றின் வேகமும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் அதிகமாகவே உள்ளது.
வாகன ஓட்டுநர்களும் தடுமாறும் வகையில் காற்றின் அழுத்தம் உள்ளது.
இந்நிலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரோடு, அனுசம் ரோடு, நேதாஜி மைதானம் அருகில் உள்ள பிளக்ஸ் பேனர்கள், காற்றின் வேகத்தால் சாய்ந்து வருகின்றன. அப்பகுதிகளை கடக்கும் போது பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், பிளக்ஸ் பேனர்கள் எந்த நேரமும் விழும் நிலையில் இருப்பதால், அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தயங்குகின்றனர். இந்த பேனர்களின் கீழ் தள்ளுவண்டி கடைகள் இருப்பதால், குழந்தைகள் அதிகம் அப்பகுதிகளில் நடமாடுகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.