ADDED : ஜூன் 20, 2025 02:31 AM
பொங்கலுார், : பொங்கலுார், சிங்கனுார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அத்திக்கடவு குடிநீர் வருவதில்லை. இதைக் கண்டித்து, பொங்கலுார் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் பி.டி.ஓ., மற்றும் அவிநாசி பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அத்திக்கடவு குடிநீர் திட்ட அதிகாரிகள் தரப்பில் கோவையிலிருந்து குடிநீர் வராததால் கொடுக்க இயலவில்லை. விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.