/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பூமலுாரில் துவக்கம் பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பூமலுாரில் துவக்கம்
பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பூமலுாரில் துவக்கம்
பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பூமலுாரில் துவக்கம்
பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பூமலுாரில் துவக்கம்
ADDED : ஜூன் 12, 2025 06:37 AM

திருப்பூர் : பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தனது மூன்றாவது கிளையை பல்லடம் தாலுகா, பூமலுாரில் துவக்கியது. பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிசாமி தேசிய கொடியேற்றினார்.
கல்வி நிறுவன உறுப்பினர்கள் மற்றும் மற்ற கிளைகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர், 'பெம்' பள்ளி சிறப்பம்சங்களை கூறினர்.
மழலை வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட 'சீசன் பெஸ்ட்'டை மாணவர்கள் கண்டுமகிழ்ந்தனர். இப்பள்ளி கருமத்தம்பட்டி, சாமளாபுரம், மங்கலம், சோமனுார், சூலுார், பல்லடம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
கல்வி மட்டுமின்றி உடற்கல்வி, கூடுதல் கலைகள், திறன் மேம்பாடு வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இப்பள்ளி முதலிடம் வகித்து வருகிறது.